இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
இந்தியா  அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்

டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் ஆகியோரும் வலுசேர்க்கின்றனர். இந்த போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது.

மூலக்கதை