கோப்பை வென்றது இலங்கை * ஆஸி., அணியை வீழ்த்தியது | ஜூன் 21, 2022

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இலங்கை * ஆஸி., அணியை வீழ்த்தியது | ஜூன் 21, 2022

கொழும்பு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இலங்கை அணி 2–1 என முன்னிலையில் இருந்தது. 

நேற்று நான்காவது போட்டி கொழும்புவில் நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அசலங்கா 110 ரன் விளாசி கைகொடுக்க, 49 ஓவரில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 192/7 ரன் என திணறியது. கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டன. ஷானகா வீசிய இந்த ஓவரில் 14 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. 

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 254 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 4 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஒருநாள் தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மூலக்கதை