மும்பை அணி அபாரம்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் | ஜூன் 22, 2022

தினமலர்  தினமலர்
மும்பை அணி அபாரம்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் | ஜூன் 22, 2022

பெங்களூரு: மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் 87வது சீசனுக்கான பைனலில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் விளையாடுகின்றன. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

 

மும்பை அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது பிரித்வி (47) அவுட்டானார். அர்மான் ஜாபர் (26), சுவேத் பார்கர் (18) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இவர், 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் தாமோர் (24) விரைவில் வெளியேறினார். பின் இணைந்த சர்பராஸ் கான், ஷாம்ஸ் முலானி ஜோடி நிதானமாக விளையாடியது.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் (40), முலானி (12) அவுட்டாகாமல் இருந்தனர். மத்திய பிரதேசம் சார்பில் அனுபவ் அகர்வால், சரன்ஷ் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை