நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழப்பு

ஓஸ்லோ:  நார்வேயின் ஓஸ்லோ நகரில் நேற்று மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று ஏராளமானோர் திரண்டு இருந்தனர். ஓரின ஈர்ப்பாளர்களுக்கு பிரபலமான இந்த விடுதியில் நேற்று ஆண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களின் மீது  கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதனால், மக்கள் அலறி அடித்து ஓடினர். துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. துப்பாக்கிச்சூட்டை அடுத்து நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

மூலக்கதை