சபரிமலையில் இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை... ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டை போதுமாம்!!

தினகரன்  தினகரன்
சபரிமலையில் இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை... ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டை போதுமாம்!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, பக்தர்கள் இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், இது தவிர 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த நிலையில், கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆகவே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டது. இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், \'மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை,\'என்றார்.

மூலக்கதை