உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் :ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் :ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை : உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை  ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவில், \'பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும், சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. எனவே அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்\', என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை