வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற புதிய விதிமுறைகள்

தினமலர்  தினமலர்
வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற புதிய விதிமுறைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-'வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர், அந்த வாடகை தாயின் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்துக் கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பு



கடந்த ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும்.


மருத்துவ செலவு


வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

புதுடில்லி-'வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர், அந்த வாடகை தாயின் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்துக் கொடுக்க வேண்டும்'

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை