அமெரிக்க பொருளாதார மந்தநிலை : இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்

தினமலர்  தினமலர்
அமெரிக்க பொருளாதார மந்தநிலை : இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்

புதுடில்லி :அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை, இந்தியாவை, நடுத்தர கால அளவில் பாதிக்கும் என ஆராய்ச்சி நிறுவனமான 'நோமுரா' அறிவித்து உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்திய பொருளாதாரம், நுகர்வு, முதலீடு, தொழில் போன்றவற்றின் மேம்பாடுகளால் வழிநடத்தப்பட்டு, இயல்புநிலையை விட அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது.சேவைகள் துறை, கடந்த மார்ச் மாதத்தில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அதைவிட மிகவும் அதிகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்து உள்ளது.இருப்பினும், நடுத்தர கால அளவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார மந்த நிலையின் காரணமாக, பாதிப்புக்கு உள்ளாகும். வளர்ச்சி வேகம் குறையும்.அமெரிக்காவில், நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில், பொருளாதார மந்தநிலை துவங்கும் என கணித்துள்ளோம்.




இந்நிலையில், இதன் பாதிப்பு இந்திய பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும்.ஏற்கனவே இந்தியா வளர்ச்சிக்கான சவால்களுடன் உள்ளது. குறிப்பாக, அரசின் இலக்கை தாண்டி பணவீக்கம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் 5.4 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு நோமுரா தெரிவித்துள்ளது.

புதுடில்லி :அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை, இந்தியாவை, நடுத்தர கால அளவில் பாதிக்கும் என ஆராய்ச்சி நிறுவனமான 'நோமுரா' அறிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை