அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் தரப்பு 'படபட!'

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் தரப்பு படபட!

சென்னை :அ.தி.மு.க., பொதுக்குழுவில் பழனிசாமி அணியின் செயல்பாடுகளால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர், கூட்டம் முடிவதற்கு முன்பே 'படபட'வென வெளியேறினர். பொதுக்குழு நடவடிக்கைகள் அறவே சரியில்லை என்றும் ஆவேசமாக குற்றம் சாட்டினர். நீதிமன்ற
உத்தரவுப்படி செயல்படாததால், பழனிசாமி தரப்பினர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.பல்வேறு தடைகளை தாண்டி, நேற்று சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. தீர்மானக் குழு வடிவமைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த, 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கூச்சல் குழப்பம்



நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் பங்கேற்றனர். அவர்களை கண்டுகொள்ளாமல், பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர்.முன்னதாக, தமிழ் மகன் உசேனை, அவைத் தலைவராக நியமித்து அறிவித்தனர். மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் என்றும் அறிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி,
கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கூட்டம் முடிவதற்கு முன்பே, அங்கிருந்து படபடவென வெளியேறினர். பொதுக்குழு நடவடிக்கைகள் குறித்து, கட்சி துணை ஒருங்கிணைப்பாளரும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி:பொதுக்குழுவில் பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்த தீர்மானங்களை எதிர்த்து, வெளிநடப்பு செய்தோம். ஏற்கனவே பரிந்துரைத்த 23 தீர்மானங்களை ரத்து செய்தனர்; அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அவற்றை நிறைவேற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபரீத புத்தி


போலி கையெழுத்து


அடுத்த மாதம் பொதுச்செயலர்



பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் அளித்த பேட்டி:

* கே.பி.முனுசாமி: பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், ஒற்றைத் தலைமை வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். அந்த மனு அடிப்படையில், அடுத்த மாதம் 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில், தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அன்றைய பொதுக்குழுவில் பழனிசாமி உறுதியாக, கட்சி பொதுச் செயலராக உருவாவார்; தொண்டர்களால் உருவாக்கப்படுவார்.

* முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமித்த குரலில், ஒற்றைத் தலைமையை வலியுறுத்தினர். நிர்வாகிகளில் 99.9 சதவீதம் பேர், பழனிசாமி தலைமையை விரும்புகின்றனர். அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எட்டப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், அடுத்த கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'கோ பூஜை!'



பொதுக்குழுவில் பங்கேற்க செல்வதற்கு முன்பு, பன்னீர்செல்வம் தன் வீட்டில் 'கோ பூஜை' நடத்தினார். அவர் புறப்பட்டு சென்றபோது, பெண்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பினர். அதேபோல் பொதுக்குழு முடிந்து, அவர் திரும்பியபோது, அவருக்கு மலர் கிரிடம், மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.அதேபோல், பழனிசாமி வீட்டிலிருந்து புறப்பட்டபோது, பெண்கள் ஆரத்தி எடுத்து, அவர் கார் மீது பூக்களை துாவி வழி அனுப்பினர். வழிநெடுகிலும் பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

'


பேச வந்த நேரத்தில் பன்னீர் ரோஜா மாலை போட்டதால், எரிச்சலான பழனிசாமி, முன்னாள் அமைச்சரை மேடையிலேயே கடிந்து கொண்டார்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வந்தார். அவருக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல இடங்களில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் ஏற்பாட்டில், பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவைத் தலைவர் தேர்வு தொடர்பான தீர்மானத்தை வரவேற்க, பழனிசாமி மேடையில் பேச துவங்கினார். அப்போது, பெஞ்சமின் மற்றும் ஆதரவாளர்கள், பெரிய பன்னீர் ரோஜா மாலையை, பழனிசாமி கழுத்தில் போடச் சென்றனர். உயர் நீதிமன்ற தடையால், பொதுச்செயலர் பதவி ஏற்க முடியாத நிலையில், மாலை போட வந்த பெஞ்சமினை மேடையிலேயே பழனிசாமி கடிந்து கொண்டார்.




பொதுக்குழு கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு முதல் திருவேற்காடு வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வானகரத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னை பைபாஸ் சாலையில், காலை 8:00 மணி முதல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருமண மண்டபம் அமைந்துள்ள வானகரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மருத்துவமனை, பள்ளிகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலால், பொதுக்குழு கூட்டம் துவங்குவதும் தாமதம் ஆனது.

கையெழுத்து பெறவில்லை!



பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களிடம், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெறுவது வழக்கம். நேற்றைய கூட்டத்தில், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெறாதது குறித்து பேட்டி அளித்தனர்.
அதன்பின், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. எத்தனை பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.

அவமதிக்கப்பட்ட பன்னீர்!



ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பன்னீர்செல்வம். மூன்று முறை முதல்வராக, ஒரு முறை துணை முதல்வராக பணியாற்றி உள்ளார். சட்டசபையில் அதிக முறை பட்ஜெட் வாசித்தவர்.ஆனால், நேற்று அவர் பொதுக்குழுவில் பங்கேற்க சென்றபோது, சில தினங்களுக்கு முன்பு வரை, அவரை வணங்கியவர்கள், பாராமுகமாக இருந்தனர்; வாழ்த்து கோஷத்திற்கு பதிலாக, ஒழிக கோஷம் எழுப்பினர்.பொதுக்குழு அரங்கில், அவர் நுழைந்தபோதும், அவரை வெளியேறும்படி பழனிசாமி ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.தற்போதும் அவர் தான் ஒருங்கிணைப்பாளர் என்பதை மறந்து, நிர்வாகிகள் அனைவரும் பாராமுகமாக இருந்தனர். மேடையில் பேசியவர்களும், அவர் பெயரை உச்சரிக்க மறந்தனர். மேடையிலிருந்து அவர் இறங்கியபோது, அவர் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசினர். பொதுக்குழு நடந்த மண்டப வளாகத்தில், அவர் வாகனம் நிற்கக் கூடாது என சிலர்
கோஷமிட்டனர்.


பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைப் பதவிக்கு, பழனிசாமியை தேர்வு செய்ய, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு, பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதரவாளர்களை திரட்ட, பெரும் செலவு செய்திருந்தனர். பன்னீர்செல்வம் தரப்பினர், நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று, பழனிசாமியின் கனவுக்கு தடை போட்டு விட்டனர். இதனால் பழனிசாமி 'அப்செட்' ஆனார்; அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது, பன்னீர்செல்வம் மீது கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.அதேநேரம் நீதிமன்ற உத்தரவு, பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு வெளியானதும், பன்னீர்செல்வம் வீட்டின் முன், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


சென்னை :அ.தி.மு.க., பொதுக்குழுவில் பழனிசாமி அணியின் செயல்பாடுகளால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர், கூட்டம் முடிவதற்கு முன்பே 'படபட'வென வெளியேறினர். பொதுக்குழு நடவடிக்கைகள் அறவே

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை