இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு

தினமலர்  தினமலர்
இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு

கொழும்பு:இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தத்தளித்து வருகிறது.'இலங்கை பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்து விட்டது' என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பார்லி.,யில் அறிவித்தார்.

இந்நிலையில், நம் வெளியுறவு துறை செயலர் வினய் கவத்ரா தலைமையிலான குழு, இலங்கை சென்றுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசித்து உரிய தீர்வுகளை வழங்க சென்றுள்ள இக்குழுவில், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது 'இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்' என, உறுதி அளிக்கப்பட்டதாக வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.இந்தாண்டு ஜனவரி முதல், இந்தியா இலங்கைக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.


கொழும்பு:இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.நம் அண்டை நாடான இலங்கை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை