5 வருடங்களுக்குப்பின் மலையாளப் படத்தில் நடித்த பாவனா

தினகரன்  தினகரன்
5 வருடங்களுக்குப்பின் மலையாளப் படத்தில் நடித்த பாவனா

திருவனந்தபுரம்:  ஐந்து வருட இடைவெளிக்குப் பின் நடிகை பாவனா நடிக்கும் மலையாளப் படத்தின் படப்பிடிப்பு நேற்று கொடுங்கல்லூரில் தொடங்கியது. நம்மள் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. பின்னர் இவர் இவிடே,  சிஐடி மூசா, திளக்கம், குரோனிக் பேச்சிலர் உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்தார். தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர், கன்னடம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னட சினிமா தயாரிப்பாளரான நவீனுக்கும், இவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2017ம் ஆண்டில் பாவனாவுக்கு ஒரு துயர சம்பவம் நடந்தது. அதன்பின்னர் இவர் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பின்னர் இவர், ‘என்டிக்காக்கொரு பிரேமமுண்டார்னு’ என்ற ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆதில் மைமூனாத் அஷ்ரப் என்ற புதுமுக இயக்குனர்  டைரக்ட் செய்யும் இந்தப் படத்தில் சரபுதீன் நாயகனாக நடிக்கிறார். நேற்று திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரில் படப்பிடிப்பு தொடங்கியது. ஐந்து வருடங்களுக்கு பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த பாவனாவை அனைவரும் வரவேற்றனர்.

மூலக்கதை