இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அசத்தல்

தினகரன்  தினகரன்
இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அசத்தல்

தம்புல்லா: இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 34ரன் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளனர். இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே மந்தானா, மேக்னா ஆகியோரை இலங்கை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது. ஆனாலும் சமாளித்து விளையாடிய ஷபாலி 31(31பந்து), கேப்டன் ஹர்மன் 22(20) ரன் எடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய    ஜெமீமா, தீப்தி இணை கடைசி ஓவரில் மட்டும் 20ரன் குவித்தது. அதனால் 20ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 138ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஜெமீமா 36*(27), தீப்தி 17*(8) ரன்னுடன் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் இனோகா 3, ஒஷாடி 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து 139ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை மகளிர் ரன் எடுக்க திணறினர். அதனால் அந்த அணியால் 20ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 104ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் இந்தியா 34ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணியில் பொறுப்புடன் விளையாடிய கவிஷா 47*(49), அனுஷ்கா 11*(8) ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ராதா 2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. 

மூலக்கதை