சர்ஃபரஸ் கான் அதிரடி மும்பை ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
சர்ஃபரஸ் கான் அதிரடி மும்பை ரன் குவிப்பு

பெங்களூர்: மத்திய பிரதேசம்(மபி)-மும்பை அணிகள் மோதும் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை முதல் இன்னிங்சில்  90ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 248ரன் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 2வது நாளான நேற்று களத்தில் இருந்த அதிரடி வீரர் சர்ஃபரஸ் கான் 40*, ஷாம்ஸ் முலானி 12*ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். மும்பை வீரர்கள் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். இடையில் அதிரடியாக விளையாடிய சர்ஃபரஸ் கான் சதம் விளாசினார். அவர் 134 ரன்னில் ஆட்டமிழந்ததும் மும்பையின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 127.4ஓவரில் 374ரன் குவித்தது. மபி அணியின் கவுரவ் 4, அனுபவ் 3, சரன்ஷ் 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மபி நிதானமாக விளையாடியது. அந்த அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 41ஓவருக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்து 123ரன் எடுத்தது. ஹிமான்சு 31ரன்னில் ஆட்டமிழக்க, யாஷ் 44*, ஷூபம் 41*ரன்னுடன் களத்தில் உள்ளனர். மும்பையின் துஷார் ஒரு விக்கெட் எடுத்தார்.

மூலக்கதை