அட்லியின் படத்தில் வில்லனாகும் ராணா

தினமலர்  தினமலர்
அட்லியின் படத்தில் வில்லனாகும் ராணா

தமிழில் விஜய் நடித்த பிகில் படத்திற்கு பிறகு தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ள அட்லி, தற்போது தெலுங்கு நடிகர் ராணாவை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதுவரை வட இந்தியாவில் நடைபெற்று வந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் இணைந்து ராணா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி வில்லனான ராணா இந்தப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை