வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 26, 27ல் குமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை