நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் போதும் ; லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சாய்பல்லவி

தினமலர்  தினமலர்
நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் போதும் ; லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சாய்பல்லவி

தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்தில் அறிமுகமாகி இப்போது தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் சாய்பல்லவி. அவர் நடித்த விராட பர்வம் நிகழ்ச்சியில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் அவரை லேடி பவன்கல்யாண் என்று அழைக்க பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்க, இப்போது அவர் தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் இந்த பட்டம் எனக்கு வேண்டாம் என்கிறார் சாய்பல்லவி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது பெயருக்கு முன்போ, பின்போ எந்த பட்டமும் போட்டுக் கொள்வது சரியல்ல. நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் எனக்கு போதும். தயவு செய்து என்னை லேடி பவர் ஸ்டார் என அழைக்காதீர்கள். இது போன்ற பட்டங்கள் என்னை ஈர்க்காது. ரசிகர்களின் அன்பினால் வளர்ந்தேன். அவர்களுக்காக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் சாதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடிதான் ஏற்படுமே தவிர அதனால் வேறு எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மூலக்கதை