இளையராஜா மீது விமர்சனம் : சீனு ராமசாமி பல்டி

தினமலர்  தினமலர்
இளையராஜா மீது விமர்சனம் : சீனு ராமசாமி பல்டி

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த மாமனிதன் படத்தின் அறிமுக நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, இளையராஜா என்னை காரணமே இல்லாமல் நிராகரத்தார். ஒரு இயக்குனராக என்னை மதிக்கவில்லை. ரீ-ரெக்கார்டிங் பணிக்கும், பாடல் ஒலிப்பதிவு பணிக்கும் என்னை அழைக்கவில்லை. அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கூடா நட்பில் இருக்கிறார் என்று விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில் சீனு ராமசாமி தனது கருத்தில் அந்தர்பல்டி அடித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது : இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதை பயன்படுத்தி சிலர் அவரை சிறுமை செய்யத் துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது. மாமனிதன் அவரது புகழ் பாடும், அவர் மீதான என் அன்பை பேசும். என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை