தனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியாய் வெங்கட்பிரபு நெகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
தனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியாய் வெங்கட்பிரபு நெகிழ்ச்சி

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட்பிரபு மன்மதலீலை படத்தை எடுத்தார். அந்த படமும் வரவேற்பை பெற்றது. அடுத்து நாகசைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்குகிறார். நாகசைதன்யாவின் 22வது படமாக உருவாகும் இந்த படம் விரைவில் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்க போவதாக தகவல் வந்தது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் முதன்முறையாக வெங்கட்பிரபு படத்திற்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

இதுபற்றி வெங்கட்பிரபு கூறுகையில், ‛‛கனவு நனவாகி உள்ளது. முதன்முறையாக எனது பெரியப்பா இளையராஜா உடன் இணைந்து, தம்பி யுவன் உடன் பணியாற்ற உள்ளேன்'' என்றார்.

வெங்கட்பிரபுவின் படத்திற்கு இசையமைக்க போவதற்கு தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளயிட்டுள்ளார் இளையராஜா. இதற்கு வெங்கட்பிரபு, ‛‛இந்த ஆஸ்கருக்கு நன்றி ராஜா அப்பா. இது எனது வாழ்நாள் சாதனை. லவ் யூ ராஜா பா'' என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை