ஒரு போட்டோ ஏற்படுத்திய பரபரப்பு : அடுத்த போட்டோவில் வெளியான உண்மை

தினமலர்  தினமலர்
ஒரு போட்டோ ஏற்படுத்திய பரபரப்பு : அடுத்த போட்டோவில் வெளியான உண்மை

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பிபி சரண். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். திடீரென சமூகவலைதளத்தில் சோனியா அகர்வால் உடன் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து இருந்தார். கூடவே ஏதோ புதியது உருவாகிறது என்றும் பதிவிட்டு இருந்தார். இது சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட யூகங்களை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக இருவரும் திருமணம் செய்ய போவதாக நினைத்து பலரும் கமெண்ட்டில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த செய்தி வைரலாக பரவியது.

இதையடுத்து மற்றொரு போட்டோவை சரண் பகிர்ந்தார். அதில் அவருடன் சோனியா, அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அதோடு வெப் சீரிஸ் என்ற ஹேஸ்டேக், பிலிம் புரடக்சன் என்றும் பதிவிட்டார். இதையடுத்தே இவர்கள் இணைந்து எடுத்தது ஒரு வெப்சீரிஸிற்காக என்பது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் பலரும் திருமணம் அப்படி, இப்படி என வதந்திகளை பரப்பிவிட்டனர்.

மூலக்கதை