ரூ.100 கோடி அவதூறு வழக்கு; முதல்வர் மனைவி தாக்கல்

தினமலர்  தினமலர்
ரூ.100 கோடி அவதூறு வழக்கு; முதல்வர் மனைவி தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுஹாத்தி-கொரோனா பரவல் காலத்தில், அசாமில் அதிக விலைக்கு முழு உடல் கவச உடைகள் வாங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வரின் மனைவி, 100 கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கவச உடைகள்



இங்கு கொரோனா பரவல் காலத்தில், பி.பி.இ., எனப்படும் முழு உடல் கவச உடைகள் வாங்கியதில் மோசடி நடந்ததாக, டில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.இந்த மோசடியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அவருடைய மனைவிக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு, முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ரினிகி புயான் சர்மா மறுப்பு தெரிவித்திருந்தனர்.'எங்களுடைய நிறுவனங்கள் வாயிலாக இந்த கவச உடைகளை வாங்கி, நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு வழங்கினோம். 'இதற்காக மாநில அரசிடம் இருந்து எந்த தொகையையும் பெறவில்லை' என, ரினிகி புயான் சர்மா கூறியிருந்தார்.

பொய் புகார்


இந்நிலையில், பொய்யான தகவல்களை கூறி, தங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக, மணீஷ் சிசோடியா மீது, அசாமின் காமரூப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரினிகி புயான் சர்மா அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார். 'பொய் புகார் கூறிய மணீஷ் சிசோடியா தனக்கு, 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்' என, அவர் மனுவில் கூறியுள்ளார்.

கவுஹாத்தி-கொரோனா பரவல் காலத்தில், அசாமில் அதிக விலைக்கு முழு உடல் கவச உடைகள் வாங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வரின் மனைவி, 100 கோடி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை