நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் புகைப்படங்கள்… போதும் நிறுத்துங்கப்பா… ரசிகர்கள் ஆதங்கம்…

தினமலர்  தினமலர்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் புகைப்படங்கள்… போதும் நிறுத்துங்கப்பா… ரசிகர்கள் ஆதங்கம்…

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது தாய்லந்து நாட்டில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் தங்களது ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுகிறார். காதலிக்கும் போதுதான் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டீர்களே, கல்யாணம் ஆகிவிட்ட பின்னும் மீண்டும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா, 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றலாமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பொங்கி வருகிறார்கள்.

மேலும், ஹனிமூனுக்குச் செல்வதென்றால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மட்டும்தானே சென்றிருப்பார்கள். அப்படியிருக்க தங்களது நெருக்கமான புகைப்படங்களை யாரை வைத்து எடுக்க வைத்திருப்பார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மூலக்கதை