மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்

தினமலர்  தினமலர்
மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்

தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தனது இளைய மகன் லிங்காவுக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாத்தி படப்பிடிப்பின் இடைவெளியில் மகன்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ள தனுஷ் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .அந்த பதிவில் , என் லிங்கா பேபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையின் ஒளியாக இருந்ததற்கு நன்றி 'என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்

மூலக்கதை