பாகிஸ்தான் திரும்பினால்'மாஜி' பிரதமர் கைதாவார்?

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்:பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக, அந்நாட்டு சட்டத் துறை அமைச்சர் அசாம் நசீர் தரார் தெரிவித்துள்ளார்.
பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது, பல்வேறு ஊழல், கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல, 2019ல் நான்கு வாரங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நவாஸ் ஷெரீப் பாக்., திரும்பாமல், லண்டனில் தங்கி விட்டார்.
இதற்கிடையே, நவாஸ் ஷெரிப்பின் சகோதரர்ஷெபாஸ் ஷெரீப் பாக்., பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப் பாக்., திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாக்., சட்டத் துறை அமைச்சர் அசாம் நசீர் தரார் கூறியதாவது:
நவாஸ் ஷெரீப் பாக்., நீதிமன்றத்தில் இட மாற்ற ஜாமின் பெற வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் பாக்., வந்தால், நீதிமன்ற ஆணைப்படி அவர் கைது செய்யப்படுவார். கடந்த, 2020ல், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்பிற்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதனால், நவாஸ் ஷெரீப் பாக்., வந்து நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும். அதன் பின், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் ஜாமின் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நவாஸ் ஷெரீப் சார்பில், லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள் பரிந்துரைத்தால், நான்கு வாரங்களில் பாக்., திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இந்நிலையில், 'நவாஸ் ஷெரீப் உட்பட அவர் கட்சியினர் யாரும், துபாயில் கவலைக்கிடமாக உள்ள பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாயகம் திரும்புவதை எதிர்க்கக் கூடாது' என, அந்நாட்டு ராணுவம் எச்சரித்துஉள்ளது.


இஸ்லாமாபாத்:பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக, அந்நாட்டு சட்டத் துறை அமைச்சர் அசாம் நசீர் தரார் தெரிவித்துள்ளார்.பாக்., முன்னாள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை