அதிபரின் ஆலோசகராகிறார் இந்திய பெண் விஞ்ஞானி

தினமலர்  தினமலர்
அதிபரின் ஆலோசகராகிறார் இந்திய பெண் விஞ்ஞானி

வாஷிங்டன்:இந்திய வம்சாவளியான பிரபல அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஆர்த்தி பிரபாகர், 63, அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு அறிவியல் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்கான, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகத்தின் இயக்குனர் பதவிக்கு, பிரபல இன்ஜினியரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஆர்த்தி பிரபாகரின் பெயரை, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதலுக்குப் பிறகு, அவர் இந்தப் பொறுப்பை ஏற்பார்.
இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண், முதல் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையை, ஆர்த்தி பிரபாகர் பெறுகிறார்.அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெறும் மூன்றாவது ஆசிய அமெரிக்கர், ஹவாய் மற்றும் பசிபிக் நாட்டவர் என்ற பெருமையையும் ஆர்த்தி பெறுவார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேக்தரீன் தாய் ஆகியோர், ஏற்கனவே அமைச்சரவையில் உள்ளனர்.ஆர்த்தியின் பெயர் உயர் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டுஉள்ளதற்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.


வாஷிங்டன்:இந்திய வம்சாவளியான பிரபல அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஆர்த்தி பிரபாகர், 63, அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபருக்கு அறிவியல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை