யோகா தினத்துக்கு எதிர்ப்பு; மோடியின் அடிமையா பாக். பிரதமர்?...டுவிட்டரில் காரசார விவாதம்

தினகரன்  தினகரன்
யோகா தினத்துக்கு எதிர்ப்பு; மோடியின் அடிமையா பாக். பிரதமர்?...டுவிட்டரில் காரசார விவாதம்

இஸ்லாமாபாத்: யோகா குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட டுவிட்டருக்கு பல்வேறு தரப்பிலும் அந்நாட்டு பிரதமர் ஷாபாசை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகின் பல நாடுகளும் ​​யோகாவின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின. அதேவழியில், பாகிஸ்தான் அரசும் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘யோகா செய்வதால் மனநிறைவும், உடலில் நிலையான மாற்றமும் ஏற்படுகின்றன.உடற்பயிற்சி உலகில், இரண்டு விசயங்கள் மிக முக்கியமானவை. அந்தவகையில் யோகா செய்வதால் மனதும், உடலும் புத்துணர்ச்சி பெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த டுவிட்டர் பதிவுக்கு, அந்நாட்டை சேர்ந்த மத அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் யோகாவை பாகிஸ்தானில் ஊக்குவிக்க வேண்டாம். அதனை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியப் பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர்  ஷாபாஸ் பின்பற்றுகிறீரா? நீங்கள் இந்தியப் பிரதமர் மோடியின் அடிமையா?’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை