டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் நெல்லையில் நாளை தொடக்கம்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் நெல்லையில் நாளை தொடக்கம்

நெல்லை: 8 அணிகள் பங்கேற்கும் 6வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது.  ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.நெல்லை சங்கர் நகரில் நாளை இரவு தொடங்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் கேப்டன் கவுசிக் காந்தி தலைமையில் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் ஜெகதீசன் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் கூறுகையில் நெல்லையில் முதல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.மேலும் இந்த தொடரில் இந்திய அணியில் விளையாடிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஐபிஎல்-லில் விளையாடிய சாய்சுதர்ஷன் ஆகியோர் பங்கேற்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை