பாட்டியை பாக்கணும் - எலினா

தினகரன்  தினகரன்
பாட்டியை பாக்கணும்  எலினா

பாரிஸ்: உக்ரைனை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா(27). சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் டென்னிஸ் வீரர் கேல் மான்ஃபில்சை திருமணம்  செய்துக் கொண்டு எலினா மான்ஃபில்ஸ் ஆக மாறியுள்ளார். விரைவில் பெண் குழந்தைக்கு தாயாக உள்ள எலினாவுக்கு உற்சாகத்துக்கு பதில் ஏக்கமும், வருத்தமும்தான் அதிகம் இருக்கிறதாம். கூடவே தன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பால் கடும் கோபத்தில்  இருக்கிறார். எலினா, தன் நாட்டுக்காக போர் நிதி, ஆதரவு திரட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். ரஷ்ய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை விளையாட அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார்.  இந்நிலையில் நேற்று நடந்த ஆன்லைன் உரையாடலில், ‘என் நாடு எதையும் சமாளிக்கும். என்நாடு ஒரு பயங்கரமான எதிரியை எதிர்கொள்ளும்போது நான் ஒதுங்கி நிற்கமாட்டேன். உக்ரைனின் ஒடெசா நகரில் என் குடும்பத்தினர் சிக்கி இருப்பதால் என் இதயம் வேதனையில் மூழ்கியுள்ளது. அதிலும்  என் 80வயதான பாட்டியை பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக உள்ளது. இந்த பிரச்னைகள் கட்டாயம் ஒருநாள் முடியும். என் பாட்டியை திரும்பிச் சென்று பார்க்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை