தொடரும் பொருளாதார நெருக்கடி!: வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான வயது வரம்பை குறைந்தது இலங்கை அரசு..!!

தினகரன்  தினகரன்
தொடரும் பொருளாதார நெருக்கடி!: வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான வயது வரம்பை குறைந்தது இலங்கை அரசு..!!

கொழும்பு: வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை இலங்கை அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் புதிய அரசு அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் போதுமான நிதியுதவியை பெற முடியாமல் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலையிலேயே தவித்து வருகிறது. இதனால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுமட்டும் அல்லாமல் இலங்கையில் பல வர்த்தக துறைகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 23ல் இருந்து 21ஆக குறைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் ஒரு நடவடிக்கையாக இலங்கை அரசு இதனை மேற்கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணியாற்றிய 7 வயது இலங்கை சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கான வயது வரம்பை இலங்கை அரசு அமல்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

மூலக்கதை