பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்...30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில் சேவை பாதிப்பு; தேவைற்ற போராட்டம் என பிரதமர் விமர்சனம்!!

தினகரன்  தினகரன்
பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்...30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில் சேவை பாதிப்பு; தேவைற்ற போராட்டம் என பிரதமர் விமர்சனம்!!

லண்டன் : ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிரிட்டன் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பன்மடங்கு அதிகரித்து விட்ட செலவீனங்களை எதிர்கொள்ளும் விதமாக ஊதியத்தை 11% அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு போரிஸ் ஜான்சன் அரசு தரப்பில் இருந்து உரிய விளக்கம் தரப்படாதை அடுத்து திங்கட்கிழமை முதல் பிரிட்டன் முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 50,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில்கள் பனிமலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தால் பிரிட்டன் முழுவதும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை பிரிட்டன் ரயில்வே நிர்வாகம் எதிர்கொண்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் தேவையில்லாத ஒன்று என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினாள் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

மூலக்கதை