சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழை: 12 பேர் உயிரிழப்பு.. ஆறுகள், நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம்..!!

தினகரன்  தினகரன்
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழை: 12 பேர் உயிரிழப்பு.. ஆறுகள், நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம்..!!

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை எதிரொலியாக 6 மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சீனாவின் தெற்கு பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 4 நாட்களில் விடாமல் பெய்த மிக பலத்த மழை மூணார் மாகாணத்தை புரட்டிப்போட்டு இருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள், கிளை நதிகள் அனைத்திலும் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் ஓடுகிறது. பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் உய்குவாட் நகரத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கரையோரத்தில் இருந்த வீடுகளை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பல நகரங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தையே வெள்ளம் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழை, வெள்ளத்தால் மூணார் உள்ளிட்ட சில மாகாணங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. கனமழைக்கு கடந்த 4 நாட்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தெற்கு மாகாண அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

மூலக்கதை