ஒரே நாளில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்

தினமலர்  தினமலர்
ஒரே நாளில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்

ராஞ்சி,:ஜார்க்கண்ட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜார்க்கண்ட்டின் பாண்டா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் ஓரான் என்பவர், அதே ஊரில் வசிக்கும் குசும் லக்ரா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தார்.
இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சந்தீப் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த சுவாதி குமாரி என்ற பெண் மீது சந்தீப் காதல் வயப்பட்டார். இந்த காதல் விவகாரம் சந்தீப் பெற்றோருக்கும், குசும் லக்ரா பெற்றோருக்கும் தெரிய வந்தது.
இரு குடும்பத்தினரும் சந்தீப் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், குசும் லக்ரா, சுவாதி குமாரி இருவரையும் சமாதானப்படுத்திய சந்தீப் அவர்களை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இந்த திருமண முடிவுக்கு பாண்டா கிராம மக்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரையுமே உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறிய சந்தீப், கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, குசும் லக்ரா மற்றும் சுவாதி குமாரி இருவரையும் ஒரே நாளில்
திருமணம் செய்து கொண்டார்.

ராஞ்சி,:ஜார்க்கண்ட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜார்க்கண்ட்டின் பாண்டா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் ஓரான் என்பவர், அதே ஊரில் வசிக்கும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை