இலங்கையில் இந்திய பெண்கள்: ‘டி–20’, ஒருநாள் போட்டியில் பங்கேற்க | ஜூன் 19, 2022

தினமலர்  தினமலர்
இலங்கையில் இந்திய பெண்கள்: ‘டி–20’, ஒருநாள் போட்டியில் பங்கேற்க | ஜூன் 19, 2022

கொழும்பு: ‘டி–20’, ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய பெண்கள் அணி, இலங்கை சென்றுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கை மண்ணில் மூன்று ‘டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டி–20’ போட்டி வரும் ஜூன் 23ல் தம்புலாவில் நடக்கிறது. 

 

மீதமுள்ள போட்டிகள் ஜூன் 25, 27ல் நடக்கவுள்ளன. ஒருநாள் தொடருக்கான போட்டிகள் முறையே ஜூலை 1, 4, 7ல் பல்லேகெலேயில் நடக்கவுள்ளன.

இதற்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி இலங்கையின் கொழும்பு சென்றது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீராங்கனைகள், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) பயிற்சி முகாமில் பங்கேற்றனர். அப்போது என்.சி.ஏ., தலைவர் லட்சுமண், இந்திய வீராங்கனைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

இதுகுறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘‘இலங்கை தொடருக்கு கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தொடர் மிகவும் சவாலானது. ஏனெனில் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி போன்ற சீனியர்கள் இல்லாமல் விளையாட உள்ளோம். இதன்மூலம் சிறந்த அணியை உருவாக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,’’ என்றார்.

மூலக்கதை