ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை: பதும் நிசங்கா கலக்கல் சதம் | ஜூன் 19, 2022

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை: பதும் நிசங்கா கலக்கல் சதம் | ஜூன் 19, 2022

கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பதும் நிசங்கா சதம் விளாச இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்றன. மூன்றாவது போட்டி கொழும்புவில் நடந்தது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (9), மிட்சல் மார்ஷ் (10) ஏமாற்றினர். லபுசேன் (29) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் ஆரோன் பின்ச் (62), அலெக்ஸ் கேரி (49), டிராவிஸ் ஹெட் (70*), மேக்ஸ்வெல் (33) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்தது.

 

சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா (25), தனஞ்செயா டி சில்வா (25) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய பதும் நிசங்கா (137) சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த குசால் மெண்டிஸ் (87) அரைசதம் விளாசினார். இலங்கை அணி 48.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 292 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சரித் அசலங்கா (13) அவுட்டாகாமல் இருந்தார்.

 

இலங்கை அணி 2–1 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் நிசங்கா வென்றார்.

மூலக்கதை