2வது ஒரு நாள் போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

தினகரன்  தினகரன்
2வது ஒரு நாள் போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி, மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 41 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 36.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 73 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை