கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்'மாஜி' முதல்வருக்கு 'சம்மன்'

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்மாஜி முதல்வருக்கு சம்மன்

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளது.


ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இவர், அம்மாநில
கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தார். அப்போது, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.





இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், ஏற்கனவே 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பரூக் அப்துல்லாவின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், 31ல் டில்லியில் உள்ள அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பரூக் அப்துல்லாவுக்கு, அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது.
இது குறித்து, தேசிய மாநாட்டு கட்சியினர் கூறியதாவது:நாட்டில் உள்ள எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்புகின்றன. அந்த வரிசையில் பரூக் அப்துல்லாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை