'ஆப்கன் மக்களுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்': அஜித் தோவல்

தினமலர்  தினமலர்
ஆப்கன் மக்களுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்: அஜித் தோவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துஷான்பே-''ஆப்கன் மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும்,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார்.




மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நான்காவது பிராந்திய பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் அஜித் தோவல் பேசியதாவது:இந்தியா - ஆப்கன் இடையே பல நுாற்றாண்டுகளாக வரலாற்று ரீதியிலான கலாசார உறவுகள் உள்ளன. அதனால் ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா என்றும் துணை நிற்கும். ஆசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதமும், பயங்கரவாத குழுக்களும் அச்சுறுத்தலாக உள்ளன.

அவற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை ஆப்கன் அதிகரிக்க வேண்டும். ஆப்கன் மக்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு உறுப்பு நாடுகள் முன்னுரிமை தர வேண்டும். இந்தியா பல ஆண்டுகளாக ஆப்கனுக்கு மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.



அத்துடன் அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்களும், இளைஞர்களும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்.பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து உதவி செய்தால், ஆப்கன் மக்களால், மீண்டும் வளமான, பிரகாசமான நாட்டை உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.இம்மாநாட்டில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.

துஷான்பே-''ஆப்கன் மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும்,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார்.nsimg3039563nsimg மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நான்காவது

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை