2,000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்தது: ரிசர்வ் வங்கி

தினமலர்  தினமலர்
2,000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்தது: ரிசர்வ் வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை : நாட்டில், 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த, 2021-22ம் நிதியாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில், கரன்சி நோட்டுகளின் புழக்கம், 13 ஆயிரத்து 53 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த, 2020 - 21ம் நிதியாண்டில், 12 ஆயிரத்து 437 கோடியாக இருந்தது.

கடந்த, 2020 மார்ச் நிலவரப்படி, 2,000 ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளின் புழக்கம், 274 கோடியாக இருந்தது. இது, 2021 மார்ச்சில், 245 கோடியாகவும், 2022 மார்ச்சில், 214 கோடியாகவும் குறைந்துள்ளது.


அதேசமயம், 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த, 2021 மார்ச் நிலவரப்படி, 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை, 3,867 கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டு மார்ச்சில், 4,554 கோடியாக உயர்ந்துள்ளது.

இதே காலத்தில், மொத்தம் புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு, 28.27 லட்சம் கோடியில் இருந்து, 31.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த கரன்சி மதிப்பில், 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 87 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை : நாட்டில், 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி கடந்த, 2021-22ம் நிதியாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை