தீபாவளிக்குள் பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
தீபாவளிக்குள் பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

லண்டன்: ''வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் இந்தியா - பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27ல் 'பிரிட்டன் - இந்தியா வாரம்' கடைப்பிடிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக லண்டனில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் பியுஷ் கோயல் பேசியதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா பரஸ்பரம் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் செய்து கொண்டது.
அதுபோல கனடாவும் ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து பேசி வருகிறது. பிரிட்டன் - இந்தியா இடையே சில பொருட்களை பரஸ்பரம் வரியின்றி இறக்குமதி செய்வது தொடர்பாக இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. நான்காவது கட்ட பேச்சு, ஜூன் 13ல் பிரிட்டனில் நடக்க உள்ளது.
தீபாவளி பண்டிகைக்குள் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இந்தியா - பிரிட்டன் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க துணைபுரியும்.இவ்வாறு அவர் பேசினார்.


லண்டன்: ''வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் இந்தியா - பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை