19க்கும் 76க்கும் 'லவ்' : விரைவில் 'டும் டும்'

தினமலர்  தினமலர்
19க்கும் 76க்கும் லவ் : விரைவில் டும் டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ரோம்: இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட காதலை அடுத்து, திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

முன்பெல்லாம் திருமணத்திற்கு பெண் தேடுபவர்கள், பெண்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து திருமணம் முடித்தனர். ஆனால் இப்போதெல்லாம் பெண் கொடுத்தால் போதும் வேறெதுவும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளது. பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஆண்களின் நிலையே இதற்கு காரணம். அப்படி இருக்கும் சூழலில், இத்தாலியை சேர்ந்த 19 வயது இளைஞர், 76 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார்.

இத்தாலியை சேர்ந்த கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞர், தான் திருமணம் செய்யவுள்ள 76 வயதான மூதாட்டியை நிச்சயித்துக்கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மூதாட்டிக்கு தனது காதலை வெளிப்படுத்திய புகைப்படத்தையும், தனது வருங்கால மனைவிக்கு அளித்த வைர மோதிரத்தின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், ‛இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண் கிடைத்தால் போதும் என்றிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் 57 ஆண்டுகள் வித்தியாத்தில் மூதாட்டியாக இருந்தாலும் ஓகே என்ற ரீதியில் திருமணம் செய்துக்கொள்ளும் இருவரின் முடிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரோம்: இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட காதலை அடுத்து, திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.முன்பெல்லாம் திருமணத்திற்கு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை