125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம்

தினமலர்  தினமலர்
125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம்


புதுடில்லி: ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், கடந்த நிதியாண்டில் மட்டும், வாகனத்தின் முக்கியமான பாகங்களுக்கான தொழில்நுட்பம் சம்பந்தமான 125 காப்புரிமைகளுக்காக, விண்ணப்பித்திருக்கிறது.

கடந்த நிதியாண்டில் தான், இதுவரை இல்லாத வகையில், மிக அதிகமான எண்ணிக்கையில் காப்புரிமை கோரி, டாடா மோட்டார்ஸ் விண்ணப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இது குறித்து, டாடா மோட்டார்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜேந்திர பேட்கர் கூறியுள்ளதாவது:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில், மிக அதிக எண்ணிக்கையில் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறது. மொத்தம் 125 காப்புரிமைகளுக்காக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.


புதிய எரிபொருள் தீர்வுகள், பாதுகாப்பு, செயல்திறன், விலை, டிஜிட்டல்மயமாக்குதல் போன்ற பிரிவுகளில் காப்புரிமை கோரப்பட்டு உள்ளது.அதிகரித்து வரும் வாடிக்கையாளர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், எங்கள் பொறியியல் திறமைகளை பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை