‘டிவி, போன்’ உற்பத்தி குறைப்பு

தினமலர்  தினமலர்
‘டிவி, போன்’ உற்பத்தி குறைப்பு


புதுடில்லி : ‘மொபைல்போன், ரெப்ரிஜிரேட்டர், டிவி’ போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், ஜூலை மாதம் வரையிலான தங்கள் உற்பத்தி இலக்கை குறைத்துள்ளன.

கடந்த ஓராண்டில், மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் விலை 9 –15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.தொடர்ச்சியாக விலை அதிகரித்து வருவதை அடுத்து, தேவைகளில் சற்று மந்த நிலை ஏற்படுவதால், இந்நிறுவனங்கள், உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து விட்டன.மொபைல் போனை பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர்களுமே, தங்கள் உற்பத்தி திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.மொபைல் போன்களின் விற்பனை, 30 சதவீதம் குறைந்துள்ளதாக துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, மொபைல் போன் தயாரிப்பாளர்கள், தங்கள் உற்பத்தி இலக்கை முன்னர் திட்டமிட்டிருந்த நிலையிலிருந்து குறைத்துள்ளனர். இப்போது இந்த நிறுவனங்கள், கைவசம் இருப்பதை விற்பதில் தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.மொபைல் போன்கள் விற்பனை, கடந்த மார்ச் காலாண்டிலிருந்து சரிந்து வருகிறது.

இந்நிலை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என கருதப்படுகிறது. மேலும் புவிசார் அரசியல் உள்ளிட்ட பிரச்னைகள் ஓரளவு தீர்ந்து, பண்டிகை காலத்தில் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை