ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூரு இன்று மோதல் பைனலுக்குள் நுழையப்போவது யார்?

தினகரன்  தினகரன்
ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான்பெங்களூரு இன்று மோதல் பைனலுக்குள் நுழையப்போவது யார்?

அகமதாபாத்:  ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் டாஸ் வென்றி ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது. 15வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் முதல் அணியாக பைனலை எட்டியது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை பெங்களூரு வென்றது. இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் குவாலிபயர் 1ல் குஜராத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தாலும் லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் ஐபிஎல் தொடரில் (2008ம் ஆண்டு) கோப்பை கைப்பற்றிய ராஜஸ்தான் அதன்பின்னர் ஒருமுறை கூட பைனலுக்குள் நுழையவில்லை. 14 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் பட்லர் 718 ரன் எடுத்து ஆரஞ்ச் தொப்பியை தொடக்கத்தில் இருந்தே தக்க வைத்துள்ளார். சாம்சன் 421 ரன் எடுத்துள்ளார். படிக்கல், ஹெட்மயர், ஜெய்ஸ்வாலும் வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சில் சாஹல் 26 விக்கெட் வீழ்த்தி டாப்பில் உள்ளார். போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் என நட்சத்திர பவுலர்கள் உள்ளனர். மறுபுறம் 8 வெற்றி, 6 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆப்பிற்குள் வந்த பெங்களூரூ, எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அந்த போட்டியில் ரஜத் படிதார் அதிரடியில் மிரட்டினார். கேப்டன் டூபிளசிஸ், விராட்கோஹ்லி, தினேஷ்கார்த்திக் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் ஹர்சல் பட்டேல் (19 விக்கெட்), ஹேசில்வுட்(18) வேகத்திலும், ஹசரங்கா (25)சுழலிலும் அசத்தி வருகின்றனர். இதுவரை 3 முறை ஐபிஎல் பைனலில் விளையாடி தோற்றுள்ள ஆர்சிபி இந்த முறை கோப்பையை வெல்லும் உத்வேகத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை பைனலில் குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்தும். இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் நடப்பு சீசனில் ஏப்5ம் தேதி மோதிய போட்டியில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஏப்.26ல் ராஜஸ்தான் 29 ரன் வித்தியாசத்திலும் வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், அஷ்வின், போல்ட், சாஹல், மெக்காய், கிருஷ்ணா. பெங்களூரூ அணி: டூபிளசிஸ் (கேப்டன்), விராட் கோஹ்லி , ரஜத் படிதார், மேக்ஸ்வெல், லோம்ரோர்,ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ் உள்ளனர். எனவே அதில் தோற்கும் அணி வெளியேறும். இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் இறுதி போட்டியில் பங்கேற்கும்.

மூலக்கதை