பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் ஷிகர்தவானை அடித்து துவைத்த தந்தை: வீடியோ வைரல்

தினகரன்  தினகரன்
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் ஷிகர்தவானை அடித்து துவைத்த தந்தை: வீடியோ வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். துவக்க ஆட்டக்காரரான இவர் தனது சிறப்பான ஆட்டத்தால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தை மட்டும் 11 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஷிகர் தவான்,  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், நடைபெற்ற 14 லீக் ஆட்டங்களிலும் விளையாடிய அவர் 453 ரன்கள் எடுத்திருந்தார். அதிகபட்சமாக 88 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.  இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்தது. அந்த அணி இன்னும் ஒரு ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிகர் தவான் அவ்வப்போது சிரிப்பான ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவண்டு. அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஷிகர் தவானை அவரது தந்தை அடித்து உதைத்து மிரட்டுகிறார். அப்போது அவரது குடும்பத்தினர் அவரது தந்தையை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அவர் விடாமல் தவானை தொடர்ந்து அடித்து மிதித்து தள்ளுகிறார். வீடியோ காட்சியின்போது தவான் அதில் வெளியிட்டுள்ள வாசகத்தில், ``நாக் அவுட் (பிளே ஆப்) சுற்றுக்கு தகுதி பெறாததால் என் தந்தையால் நான் நாக் அவுட் செய்யப்பட்டேன்’’ என்று தனக்கே உரிய சிரிப்புடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை