ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு

தினமலர்  தினமலர்
ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லத்தி'. போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் தற்போது படம் வெளியீடு தொடர்பாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை