நெத்தியடி! மாநிலங்களின் வருவாய் குறையாது என அமைச்சர் உறுதி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து விளக்கம்

தினமலர்  தினமலர்
நெத்தியடி! மாநிலங்களின் வருவாய் குறையாது என அமைச்சர் உறுதி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து விளக்கம்

புதுடில்லி,-''பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு குறையாது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட கூறியுள்ளார்.

முந்தைய ஆட்சியுடன் ஒப்பிட்டு இதற்கு தெளிவான பதிலளித்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவர் முறியடித்துள்ளார்.சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் நம் நாட்டில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து, விலைவாசி அதிகரித்து உள்ளது.இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையிலும், பெட்ரோல், டீசலுக்கான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், '1 லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 8 ரூபாயும், டீசலுக்கான விலை 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது.இதனால், இவற்றின் விலை முறையே, 9.50 ரூபாய் மற்றும் 7 ரூபாய் குறையும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.வலியுறுத்தல்மேலும், 'மாநில அரசுகளும், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியைக் குறைக்க முன்வர வேண்டும்.'கடந்த 2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்த போதும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்கள் குறைக்கவில்லை.

தற்போது விலையை குறைக்க அவை முன்வர வேண்டும்' என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம், கடும் விமர்சனத்தை முன் வைத்தார். 'பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும்' என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தக் கருத்தை அவர் நேற்று திரும்பப் பெற்றார்.

'பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு, மத்திய அரசின் பொறுப்பு என்பதை மத்திய நிதி அமைச்சரே கூறியுள்ளார். 'அதனால், என் கருத்தை திருத்திக் கொள்கிறேன்' என, அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.கடந்த 2014ல் பா.ஜ., அரசு அமைந்ததற்கு முன் இருந்த வரிகளையே தொடர வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் கூறியிருந்தன.

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் உட்பட பல மாநிலத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பகிர்ந்தளிப்புஇவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக பல விமர்சனங்கள், கேள்விகளை பலர் முன் வைத்துள்ளனர். அவர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும், இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு வரிகளை விதிக்கிறது. அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி, வேளாண் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கூடுதல் வரி ஆகியவை அடங்கியதே கலால் வரி.இதில், அடிப்படை கலால் வரி வருவாய் மட்டுமே மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதாவது அடிப்படை கலால் வரி வருவாயில், 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.கடந்த 2021 நவம்பரில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. தற்போது, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவை, முழுக்க முழுக்க சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரியில் இருந்து செய்யப்பட்டுள்ளது.அடிப்படை கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையாது. கடந்த 2021 நவ., மற்றும் தற்போது செய்யப்பட்டுள்ள வரி குறைப்பால் ஏற்படும் மொத்த சுமையை மத்திய அரசே ஏற்கிறது.13.9 லட்சம் கோடி ரூபாய்தற்போதைய வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதே போல், 2021 நவ., விலை குறைப்பால், ஆண்டுக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆக மொத்தம், 2.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது.பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி மூலம் கிடைக்கும் நிதி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுகிறது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின், 2014ல் இருந்து, 2022 வரை, 90.9 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது, 2004 - 2014 காலகட்டத்தில், 49.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த அரசு செலவிட்ட தொகையில் 24.85 லட்சம் கோடி ரூபாய், உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கான மானியமும் அடங்கும். அதே நேரத்தில் முந்தைய ஆட்சியில், 10 ஆண்டுகளில் 13.9 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, அதன் மீதான, 'வாட்' வரியை குறைப்பதாக ராஜஸ்தான், கேரளா, மஹாராஷ்டிரா அரசுகள் அறிவித்துள்ளன.பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகளும் குறைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைப்பதாக நேற்று அறிவித்தார்.'பெட்ரோல் மீதான வரி, 2.48 ரூபாயும், டீசல் மீதான வரி, 1.16 ரூபாயும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை குறைப்புடன் சேர்க்கையில், பெட்ரோலுக்கு, 10.48 ரூபாயும், டீசலுக்கு, 7.16 ரூபாயும் குறையும்' என, சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ள கேரளாவும், விலை குறைப்பை அறிவித்துள்ளது. அங்கு ௧ லிட்டர் பெட்ரோலுக்கான வாட் வரி, 2.41 ரூபாயும், டீசல் மீதான வரி, 1.36 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவிலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் பெட்ரோலுக்கான வரி, 2.08 ரூபாயும், டீசலுக்கான வரி, 1.44 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும் ஒடிசா மாநில அரசும், பெட்ரோலுக்கான வாட் வரியை, 1 லிட்டருக்கு 2.04 ரூபாயும், டீசலுக்கான வரியை 1.44 ரூபாயும் குறைத்துள்ளது.

.புதுடில்லி,-''பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு குறையாது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட கூறியுள்ளார்.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை