'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்

தினமலர்  தினமலர்
ஹெல்மெட் சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.






ஆனால், 50 சதவீத வாகன ஓட்டிகள் கூட இதை கடைப்பிடிப்பது இல்லை.அப்படியே, ஹெல்மெட் வைத்திருந்தாலும் தலையில் அணிவது இல்லை. இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்வது மற்றும் டேங்கரில் வைத்து பயணிப்பதுமாக உள்ளனர்.சமீபத்தில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்;





ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'உயிரிழப்புகளை தடுக்கவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.'மறந்து வீட்டில் வைத்துவிட்டேன். இனி தான் வாங்க வேண்டும்' என, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, போக்குவரத்து விதிகளை மீற முயற்சி செய்ய வேண்டாம்' என்றனர்.

சென்னை : இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை