மீண்டும் தலைதூக்கும் அதிருப்தி சமாஜ்வாடி கூட்டத்தை புறக்கணித்த அசம்கான்

தினகரன்  தினகரன்
மீண்டும் தலைதூக்கும் அதிருப்தி சமாஜ்வாடி கூட்டத்தை புறக்கணித்த அசம்கான்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் நடந்த கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அசம்கான், ஷிவ்பால் யாதவ் பங்கேற்கவில்லை. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம், லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சமீபத்தில் சீதாபூர் சிறையில் இருந்து வெளிவந்த மூத்த தலைவர் அசம்கான், அவரது மகனும், இடாவா ஜஸ்வந்த் நகர் தொகுதி எம்எல்ஏ.வுமான அப்துல்லா அசமும் கலந்து கொள்ளவில்லை. இது தவிர அகிலேஷின் சித்தப்பாவும் கட்சியின் மூத்த தலைவருமான ஷிவ்பால் யாதவும் பங்கேற்கவில்லை. இது பற்றி சமாஜ்வாடி எம்எல்ஏ. ரவிதாஸ் மெஹ்ரோத்ரா கூறுகையில், ``ஷிவ்பால் யாதவை பொருத்தவரை, அவர் கட்சி நடத்திய கடந்த எம்எம்ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை,’ என்று தெரிவித்தார். கட்சியில் முக்கியமான தலைவர்கள் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது கட்சியில் அதிருப்தி கோஷ்டி மீண்டும் தலைதூக்குகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை