அடுத்தடுத்து தேர்தல் வருவதால் பீதி விலைவாசியை கட்டுப்படுத்த மக்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கு சலுகை: ஒன்றிய அரசு ரகசிய பரிசீலனை

தினகரன்  தினகரன்
அடுத்தடுத்து தேர்தல் வருவதால் பீதி விலைவாசியை கட்டுப்படுத்த மக்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கு சலுகை: ஒன்றிய அரசு ரகசிய பரிசீலனை

புதுடெல்லி:  நாட்டின் பணவீக்கம் அதிகமாகி வருவதால், விலைவாசியும் கட்டுக்கடங்காமல்  போய் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், இவற்றின் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் திடீரென முறையே லிட்டருக்கு ரூ.8ம்  ரூ.6ம் குறைத்தது. இதன் காரணமாக, ஒன்றிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இருந்த போதிலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையிலும், மொத்த விற்பனை பணவீக்கத்தின் அளவு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையிலும் உச்சத்தை தொட்டுள்ளன. அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ள நிலையில், விலைவாசி உயர்வு பாஜ.வின் வெற்றியை பாதிக்கும் என்பதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த நிதியாண்டில் மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கான சலுகைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு ரகசியமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சலுகையில், மீண்டும் ஒருமுறை பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.* ரூ.14 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் திடீரென ஏற்பட்டுள்ள செலவுகள் காரணமாக, ஒன்றிய அரசின் நிதிநிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சரிகட்டுவதற்காக, சந்தைகளில் இருந்து ரூ.14 லட்சம் கோடி வரையில் கடனாக பெறுவதற்கும் ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத. ஒன்றிய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.9.7 லட்சம் கோடி கடன் திரட்டுவதற்கான அறிவிப்பு இடம் பெற்று இருந்தது. தற்போது இதை விட கூடுலாக கடன் பெறப்பட உள்ளது.

மூலக்கதை