ஜார்க்கண்ட்டில் தேர்தல் பேரணி பாக். ஆதரவு கோஷம் 62 பேர் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
ஜார்க்கண்ட்டில் தேர்தல் பேரணி பாக். ஆதரவு கோஷம் 62 பேர் மீது வழக்கு

ஹசாரிபாக்: ஜார்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ளன. 3ம் மற்றும் 4ம் கட்டத் தேர்தல்கள் நாளை மறுநாளும், 27ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில், 2ம் கட்டத் தேர்தலில் வெற்றி பெற்ற அமீனா காதூன் தனது ஆதரவாளர்களிடம் பர்கதா மண்டலத்துக்கு உட்பட்ட ஷிலாடி பகுதியில் இருந்து வெற்றி பேரணி நடத்தினார். இந்த பேரணியின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 62 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத் தன்மை கண்டறியப்படாததால், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மூலக்கதை