பெட்ரோல், டீசல் வரி குறைப்பு மூலம் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ராகுல் காந்தி கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு மூலம் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: ‘பெட்ரோல்,டீசல்  விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று முன்தினம் ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த வரிக்குறைப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:( பெட்ரோல் விலை:2020 மே 21ல் ரூ.69.05 ஆகவும்2022 மார்ச் 1ல் ரூ.95.4 ஆகவும்2022 மே 1 ல் ரூ.105.4 ஆகவும் இன்று மே 22 ல் ரூ.96.07 ஆகவும் இருந்தது.இனி, தினந்தோறும் 0.8 மற்றும் 0.3 என்ற அளவில் உயர துவங்கும் என எதிர்பார்க்கலாம். உண்மையான நிவாரணத்தை மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும். பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை பெற பொதுமக்களுக்கு தகுதி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பு மூலம் மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.* காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:* பொருளாதாரம் பற்றி  எதுவும் ஒன்றிய அரசுக்கு தெரியாது. நிதி நிர்வாக சீர்கேடுகள் தற்போதுதான் வெளியே வந்துகொண்டே இருக்கிறது.* மூன்று அடிகள் முன்னோக்கி சென்று விட்டு மறுபடியும் 2 அடிகள் பின்னோக்கி வருவதால் சாதாரண மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* மாநிலங்களின் நிலை: சிதம்பரம் ஆதங்கம்காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் கலால் வரிதான் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டு மொத்த நிதிச்சுமையும் ஒன்றிய அரசுக்குத்தான். அந்த வகையில் நான் எனது கருத்தைத் திருத்திக் கொள்கிறேன். ஆனால், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் வரியிலிருந்து குறைந்த பங்களிப்பையே பெறுகின்றன. அவற்றின் வருமானம் பெட்ரோல், டீசல் வாட் வரியை நம்பியே உள்ளது. ஆகையால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியும், கூடுதல் மானியங்களும் அளிக்காத வரையில் மாநிலங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியுமா? என்று தெரியவில்லை,’ என்று கூறியுள்ளார்.* இத்தாலி கண்ணாடி மாத்துங்க...அருணாச்சல பிரதேசத்தின் நம்சாய் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்த பிராந்தியத்திற்கு மோடி என்ன செய்தார் என்று ராகுல் ேகட்கிறார். அவர் தனது இத்தாலிய கண்ணாடிகளை தூக்கி வீசிவிட்டு, இந்திய கண்ணாடிகளை அணிய வேண்டும். அப்போதுதான், உங்கள் கட்சி 50 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சியை, இப்பகுதியில் மோடி கொண்டு வந்ததை பார்க்க முடியும்,’ என்று தெரிவித்தார்.மாநில அரசின் வரியில் கை வைக்க மாட்டோம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததின் மூலம், மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி பங்கு குறையக் கூடும் என்று பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டி உள்ளன.  இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து  டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்கும்படி பிரதமர்  மோடி கூறினார். இதையடுத்து வரி  குறைப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதுபற்றி  விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி சில உண்மைகளை பகிர்கிறேன்.* அடிப்படை கலால் வரி (பிஈடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஈடி) , சாலை  மற்றும் உள்கட்டமைப்பு செஸ் (ஆர்ஐசி) மற்றும் வேளாண்மை மற்றும்  உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) ஆகியவை இணைந்தது தான் பெட்ரோல்  மற்றும் டீசல் மீதான கலால் வரியை உருவாக்குகின்றன.* இதில் அடிப்படை கலால் வரி மட்டும் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியது. மற்ற 3 வரிகளும் மாநிலங்களுடன் பகிர முடியாதவை. * தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.8, டீசல் மீது ரூ.6  கலால் வரி குறைப்பு என்பது முற்றிலுமாக சாலை மற்றும் உள்கட்டமைப்புக்கு கிடைக்கும் செஸ்சில் இருந்து  செய்யப்பட்டுள்ளது. * இதேபோல் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பரில் கலால்  வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு  ரூ.10ம் குறைக்கப்பட்டது. இதுவும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ்சில் இருந்துதான்  செய்யப்பட்டது.* இதன் மூலம், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியில் கை வைக்கப்படவில்லை.*  ஒன்றிய அரசு மேற்கொண்ட இந்த 2 கலால் வரிக்குறைப்புகளின் முழுச்சுமையும் ஒன்றிய அரசால் தான் ஏற்கப்படுகிறது. * தற்போதைய வரி குறைப்பு மூலம், ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். * கடந்த நவம்பர் மாதம் செய்யப்பட்ட வரி குறைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.* அதன்படி பார்த்தால், வரிகுறைப்பால் ஆண்டுக்கு ஒன்றிய அரசுக்கு ரூ.2.20 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை